அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் - கங்கனாவை அறைந்த பெண் காவலர்

சண்டிகார் விமான நிலையத்தில் நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.;

Update: 2024-06-07 17:42 GMT

சண்டிகார்,

நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலபிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றிபெற்றார். அவர் டெல்லி செல்வத்ற்காக நேற்றுமுன் தினம் பிற்பகல் சண்டிகர் விமான நிலையம் வந்தார்.

அப்போது, விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கங்கனாவை அறைந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2020ம் ஆண்டு விவசாய சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய தனது தாய் உள்பட அனைவரையும் கங்கனா அவமானபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததால் கங்கனாவை அறைந்ததாக தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலர் குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்த வேலை இழந்ததை நினைத்து நான் பயப்படப்போவதில்லை. எனது அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார்' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்