உத்தர பிரதேசம் கோசி தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர் வெற்றி..!

உத்தர பிரதேசம் மாநிலம் கோசி தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.;

Update: 2023-09-08 14:08 GMT

கோப்புப்படம் PTI

கோசி,

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேரளா புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் அமோக வெற்றி பெற்றார். திரிபுராவில் 2 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேற்கு வங்காளம் துப்குரி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது உத்தர பிரதேசம் மாநிலம் கோசி தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கோசி தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் தாராசிங் சவுகானை விட 42,759 வாக்குகள் அதிகம் பெற்று சுதாகர் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்