நாகமங்களா நகரசபையில் ஒரு வார்டுக்கு இன்று இடைதேர்தல்;
நாகமங்களா நகரசபையில் ஒரு வார்டுக்கு இன்று இடைதேர்தல் நடைபெறுவதால் அந்த பகுதியில் மதுப்பானம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;
மண்டியா;
மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகாவில் உள்ள நகரசபை வார்டு எண் 3-ல் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெறவுள்ளது. இது குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் அஸ்வதி கூறியதாவது:-
மண்டியா மாவட்டம் நாகமங்களா நகரசபை வார்டு எண் 3-ல் நாளை .(இன்று) தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் வார்டையொட்டி 3 கி.மீ தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் 4 பேருக்கு மேல் சாலையில் நடமாட கூடாது. வீடுகளில் சுப நிகழ்ச்சிகளை நடத்தினால் அருகேயுள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கவேண்டும். மேலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் மதுபானக்கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.