கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் காலஅவகாசம் நீட்டிப்பு

கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. பஸ்களில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-29 20:50 GMT

பெங்களூரு

கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. பஸ்களில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பஸ் பாஸ்

பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.), கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2021-2022-ம் ஆண்டுக்கான பஸ் பாஸ்களின் காலம் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

காலஅவகாசம் நீட்டிப்பு

இந்த நிலையில் பி.எம்.டி.சி.யும், கே.எஸ்.ஆர்.டி.சி.யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பஸ் பாஸ் கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. அதன்படி பி.எம்.டி.சி. பஸ்களில் பயணிக்க 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள், பி.யூ.சி. படிக்கும் மாணவர்களுக்கான பஸ் பாஸ் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தொழிற்படிப்பு, டிப்ளமோ, மருத்துவ மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களின் பஸ் பாஸ் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


மேலும் கே.எஸ்.ஆர்.டி.சி.யும் கல்லூரி மாணவர்களுக்கான பஸ் பாசை நவம்பர் மாதம் வரை நீட்டித்து உள்ளது. இந்த காலகட்டத்திற்கு உரிய பணத்தை செலுத்தி அதற்கு உரிய ரசீதை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும் என்றும், பஸ் பாசுடன் சேர்த்து அந்த ரசீதையும் காட்டி மாணவர்கள் பயணிக்கலாம் என்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்