மாணவி, மாணவர்களை மிரட்டுவது ஆபத்தானது

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய மாணவி, மாணவர்களை மிரட்டுவது ஆபத்தானது என்று நடிகர் சேத்தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.;

Update: 2022-11-19 15:43 GMT

பெங்களூரு-

பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவி, 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாணவி, மாணவர்களுக்கு நடிகர் சேத்தன் ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

'கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவியும், 2 மாணவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வேடிக்கையாக கோஷம் எழுப்பினர். இதற்காக அவர்களை கைது செய்வது, அவர்களை மிரட்டுவது பொருத்தமற்றது, ஆபத்தானது. பாகிஸ்தான் மக்கள் எங்கள் சகோதரர்கள், சகோதரிகள். எதிரிகள் இல்லை' என்று கூறியுள்ளார். நடிகர் சேத்தனின் இந்த பதிவுக்கும் சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலோனார் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்