பெண் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த எல்லைப்பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் - அதிர்ச்சி சம்பவம்

எல்லைப்பாதுகாப்பு படை பெண் கான்ஸ்டபிளை பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Update: 2023-02-21 11:05 GMT

கொல்கத்தா,

இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்) படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் வங்காளதேசத்தை ஒட்டிய எல்லைப்பகுதியான மேற்குவங்காளத்தின் நடையா மாவட்டம் துங்கி எல்லைப்பகுதியில் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், துங்கி எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப்பாதுகாப்பு படையினர் பெண் கான்ஸ்டபிளை இன்ஸ்பெக்டர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

எல்லைப்பாதுகாப்பு படை முகாமில் நேற்று முன் தினம் இரவு இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிள் மருத்துவ ஆய்வுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக எல்லைப்பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிஎஸ்எப் உத்தரவிட்டுள்ளது. மேலும் துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

பிஎஸ்எப் பெண் கான்ஸ்டபிள் பிஎஸ்எப் கமெண்டோவால் நடியா முகாமில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை பிஎஸ்எப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கமெண்டோ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாஜக என்ன சொல்லப்போகிறது?' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்