பிருந்தாவன் பூங்கா மீண்டும் திறப்பு

சிறுத்தை பீதியால் மூடப்பட்ட பிருந்தாவன் பூங்காவை மீண்டும் திறக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.;

Update: 2022-12-02 21:25 GMT

மைசூரு:-

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு முன்பாக பிருந்தாவன் பூங்கா அமைந்துள்ளது. கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பிருந்தாவன் பூங்காவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனால், பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இந்த நிலையில் ஒரு மாதம் ஆகியும் பிருந்தாவன் பூங்காவில் சிறுத்தை பிடிக்கப்படாமல் இருந்தது. இதன்காரணமாக பிருந்தாவன் பூங்கா நிர்வாகத்துக்கு சுமார் ரூ.1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது பிருந்தாவன் பூங்காவில் சிறுத்தை தென்படாததால், பூங்காவை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 30-ந்தேதி முதல் பிருந்தாவன் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்