பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஆதாரங்களைத் திரட்ட 4 மாநிலங்களுக்கு டெல்லி போலீசார் பயணம்

டெல்லி போலீசார் 4 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பிரிஜ் பூஷன் மீதான புகார்கள் தொடர்பாக ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.;

Update: 2023-05-12 11:14 GMT

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த தனிப்படை போலீசார் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகம் மற்றும் அரியானா ஆகிய 4 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் பிரிஜ் பூஷனின் வெளிநாட்டுப் பயணங்களின் போது அவர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்