மின் இணைப்பு வழங்க லஞ்சம்; ஜெஸ்காம் அதிகாரி கைது
மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய ஜெஸ்காம் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஹகரிபொம்மனஹள்ளி டவுன் பகுதியில் கலபுரகி மின்வினியோக நிறுவன (ஜெஸ்காம்) அலுவலகம் உள்ளது. இங்கு பக்கிரப்பா என்பவர் கிளை அதிகாரியாக உள்ளார். இந்த நிலையில் பிந்தஹள்ளியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விளை நிலத்திற்கு மின்வசதி செய்து கொடுக்க கோரி விண்ணப்பித்து இருந்தார். அப்போது ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என கூறி உள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத விவசாயி இதுகுறித்து பல்லாரி லோக் அயுக்தாவில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அறிவரையின்படி, பக்கிரப்பாவை நேரில் சந்தித்த விவசாயி ரூ.4 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் ஜெஸ்காம் அதிகாரியை கையும், களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் லஞ்ச பணத்தை மீட்டனர்.