லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகளிடம் இருந்து ரூ.23 லட்சம் வசூல்

தார்வார் மாவட்டம் யரகொப்பா கிராம பஞ்சாயத்தில் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகளிடம் இருந்து ரூ.23 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

Update: 2022-11-07 21:53 GMT

தார்வார்:

தார்வார் மாவட்டம் யரகொப்பா கிராம பஞ்சாயத்தில் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகளிடம் இருந்து ரூ.23 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

லஞ்சம்

தார்வார் மாவட்டம் யரகொப்பா கிராம பஞ்சாயத்தில் கடந்த 4 ஆண்டுகளாக லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் போராட்டங்களும் நடத்தினர். இது குறித்து கிராம பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி சுரேஷ் என்பவருக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் விசாரணை நடத்தியதில் குடிநீர் குழாய், மோட்டார் மற்றும் கால்வாய் பணிகள், கூலி தொழிலாளிகளுக்கு ஊதியம் அளிப்பதில் முறைகேடு மற்றும் பல்வேறு அரசு பணிகளை செய்து கொடுப்பதற்கு பணம் லஞ்சமாக ெபற்றிருப்பது தெரியவந்தது.

ரூ.23 லட்சம் வசூல்

இதில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்த கிராம வளர்ச்சி திட்ட அதிகாரி ஆர்.ஆர்.பாட்டீல், சகுந்தலா ஆகியோர் நேரடியாக ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கடந்த 4 ஆண்டுகளில் லஞ்சமாக வசூல் செய்த பணத்தை திரும்ப செலுத்தும்படி கிராம பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி நேற்று அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.23 லட்சத்து 89 ஆயிரத்து 903 வசூல் செய்யப்பட்டது. அதாவது ஆர்.ஆர்.பாட்டீல் லஞ்சமாக பெற்ற ரூ.8.86 லட்சமும், சகுந்தலா லஞ்சமாக பெற்ற ரூ.15.03 லட்சமும் வசூல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் கிராம பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்