போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை - இலக்கை வெற்றிகரமாக தாக்கியது...!

போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியது.

Update: 2023-05-15 03:04 GMT

டெல்லி,

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் மொர்முகவ் போர் கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று நடந்த இந்த பரிசோதனையில் போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

ஐஎன்ஸ் மொர்முகவ் போர் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை இரண்டுமோ இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவையாகும்.

ஐஎன்ஸ் மொர்முகவ் போர் கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் போர் கப்பலில் வலிமை மேலும் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்