மாடுகளுக்கு பரவும் தோல் நோய் மனிதர்களை பாதிக்காது

மாடுகளுக்கு பரவும் தோல் நோய் மனிதர்களை பாதிக்காது என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-19 18:45 GMT

கொள்ளேகால்:

கர்நாடகத்தில் பசுமாடுகளுக்கு தோல் நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு நோய் தொற்று அதிகமாகி இறந்துவிடுகிறது. சில மாடுகள் பால்சுரக்கும் தன்மையை இழந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த பாதிப்பால் மாநில கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மாவட்டந்தோறும் கால்நடைத்துறை சார்பில் சுகாதாரத்துறை மையங்களில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்நடைத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

அதில் நோய் தொற்று பாதித்த மாடுகளை, பிற கால்நடைகளுடன் சேர்த்து கட்ட கூடாது. அதனை தனிமைப்படுத்தி வைக்கவேண்டும். தொழுவங்களில் கொசுவலைகளை கொண்டு தடுப்புகள் அமைத்து கொள்வது நல்லது. மேலும் கொசுத்தொல்லையில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேப்ப எண்ணெய் பூசலாம். இந்த தோய் மனிதர்களுக்கு பரவாது. எனவே தொற்று பாதித்த மாடுகளை பராமரிப்பதில் பயப்பட வேண்டாம். தடுப்பூசி செலுத்தினாலே மாடுகளுக்கு தோல் நோய் பரவுவதை தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்