நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.;

Update: 2023-03-29 11:32 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12-வது நாளாக முடங்கியது.

ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.

12வது நாளவதாக மக்களவை இன்று கூடியதும், ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து சபாநாயகர் இருக்கையை, காங்., - எம்.பி.,க்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மக்களவை ஏப்ரல் 3ம் தேதி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால், ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் எம்.பி பதவி பறிக்கப்பட்டத்தை கண்டித்து, பார்லிமென்டில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்