மும்பையில் பிரபல ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 2 பேர் கைது

மும்பையில் பிரபல ஓட்டல் ஒன்றை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-08-24 16:41 GMT



மும்பை,



மும்பையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் 4 வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என தொலைபேசி வழியே மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து உள்ளார்.

வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய வேண்டுமென்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என்றும் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து லலித் ஓட்டல் நிர்வாகம் போலீசில் தகவல் தெரிவித்து உள்ளது.

போலீசார் உடனடியாக ஓட்டலின் ஒவ்வொரு பகுதியிலும் சோதனை நடத்தி உள்ளனர். அதில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது சாஹர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இதில் தொடர்புடைய 2 பேரை குஜராத்தின் வாபி நகரில் வைத்து போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் மும்பை நகருக்கு இன்று கொண்டு வரப்பட்டனர். உள்ளூர் கோர்ட்டு ஒன்றில் அவர்கள் இருவரும் நாளை ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்