மும்பையில் 3 இடங்களில் குண்டு வெடிக்கும்: தொலைபேசி வழியே மிரட்டல் - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு!

இன்பினிட்டி மால், ஜுகு மால் மற்றும் விமான நிலைய சகாரா ஓட்டல் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியே மிரட்டல் வந்து உள்ளது.

Update: 2022-10-20 03:45 GMT

மும்பை,

மும்பையில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி அழைப்பின் வழியே நேற்று மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி மும்பை போலீசார் கூறும்போது, மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுகுவில் உள்ள பி.வி.ஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஓட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து போலீசாருக்கு தொலைபேசி வழியே நேற்று மிரட்டல் தகவல் வந்து உள்ளது. இந்த மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு முகமைகள் ஈடுபட்டு உள்ளன என தெரிவித்து உள்ளனர்.

இந்த மூன்று இடங்களிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். போன் மூலம் மிரட்டல் அழைப்பு விடுத்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்