மும்பை கடற்கரை சாலை பணி 69 சதவீதம் நிறைவு - மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

மும்பை கடற்கரை சாலை பணி 69 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-04 22:42 GMT

ரூ.3,545 கோடி ஒதுக்கீடு

மும்பை மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் மும்பை மெரின் டிரைவ் பகுதியில் இருந்து தகிசர் வரை நடந்து வரும் மும்பை கடற்கரை சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் கடற்கரை சாலை திட்டத்துக்கு ரூ.2 ஆயிரத்து 650 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த பட்ஜெட்டை கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.895 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

24 மணிநேர கண்காணிப்பு

கடற்கரை சாலை திட்டம் தொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மும்பை கடற்கரை சாலை திட்டப்பணிகள் 69 சதவீதம் முடிந்து உள்ளது. 4-வது கட்ட பணியில் சுரங்கம் தோண்டு பணி முடிந்துவிட்டது. அதில் 2-வது சுரங்கம் தோண்டும் பணியும் 90 சதவீதம் முடிந்துவிட்டது. கடற்கரை சாலையில் நவீன போக்குவரத்து கட்டுப்பாடு மேலாண்மை, பாதுகாப்பு கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கடற்கரை சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தால் கண்காணிக்கப்படும். 2023-24 ஆண்டுக்குள் கடற்கரை சாலை திட்டப்பணிகளை முடிப்பதில் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மும்பை கடற்கரை சாலை திட்டப்பணிகள் முடிந்தால் அது மேற்கு புறநகர் பகுதி மக்களுக்கு வரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு புறநகர் பகுதியில் இருந்து மும்பை நகருக்குள் செல்லாமல் தென்மும்பைக்கு வாகன ஓட்டிகள் வர முடியும். மும்பை கடற்கரை சாலைத்திட்டத்தால், மேற்குவிரைவு சாலையில் ேபாக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்