எனக்கு டிக்கெட் கிடைக்காததற்கு பி.எல்.சந்தோஷ் தான் காரணம்; ஜெகதீஷ் ஷெட்டர் பகிரங்க குற்றச்சாட்டு

எனக்கு டிக்கெட் கிடைக்காததற்கு பி.எல்.சந்தோஷ் தான் காரணம் என்று ஜெகதீஷ் ஷெட்டர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2023-04-18 22:21 GMT

பெங்களூரு:

பி.எல்.சந்தோஷ்

கர்நாடக முன்னாள் முதல்-மந்தரி ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் நான் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் எனக்கு கட்சி மேலிடம் டிக்கெட் நிராகரித்தது ஏன்?. நான் என்ன பார்த்தேன் என்றால், ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பி.எல்.சந்தோஷ். அவர் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர். இந்த பிரச்சினைக்கு அதாவது எனக்கு டிக்கெட் கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தான்.

மகேஷ் தெங்கினிகாய்

சிலர் எனக்கு எதிராக விளையாடியுள்ளனர். முதலில் எனக்கு டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த முடிவை வாபஸ் பெற்றுள்ளனர். எனது தொகுதியில் மகேஷ் தெங்கினிகாய்க்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவரை கட்சி கவுரவிக்க விரும்பி இருந்தால் எம்.எல்.சி. பதவியோ அல்லது முக்கியமான பதவியோ வழங்கி இருக்கலாம்.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கல்கட்டகி தொகுதியில் சன்னப்பா நிம்பண்ணனவர் வலுவான வேட்பாளராக இருந்தார். ஆனால் அவருக்கு எதிராக உள்ளூர் தலைவர்கள் செயல்பட்டனர். ஆனாலும் அவரையே அப்போது கட்சி மேலிடம் நிறுத்தியது. தற்போதைய வேட்பாளர் மகேஷ் தெங்கினிகாய் எனக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக தவறான தகவல்களை பரப்பி வந்தார். பி.எல்.சந்தோசுக்கு பல மானச புத்திரர்கள் உள்ளனர். அவர்கள் தான் எனக்கு எதிராக தவறான பிரசாரம் செய்தனர்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்