சட்டசபையில் தர்ணா போராட்டத்தை கைவிட்ட பா.ஜனதா

சட்டசபையில் தர்ணா போராட்டத்தை பா.ஜனதா கைவிட்டது.

Update: 2023-07-05 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் காங்கிரஸ் அரசின் 5 இலவச திட்டங்கள் குறித்து விவாதிக்க முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சபாநாயகர் யு.டி.காதரிடம் அனுமதி கேட்டார். அதற்கு முன்பாக 5 இலவச திட்டங்கள் குறித்து விவாதிக்க தீர்மானம் ஒன்றையும் சபாநாயகரிடம் பா.ஜனதாவினர் கொடுத்திருந்தனர். ஆனால் 5 இலவச திட்டங்கள் குறித்து கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம் என்று சபாநாயகர் கூறியதை பா.ஜனதாவினர் ஏற்காமல் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையையும் அவர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் முழுவதும் எந்த விவாதமும் நடைபெறாமல் சபை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று கர்நாடக சட்டசபை கூடியதும் 5 இலவச திட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதி கொடுக்கும்படி முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேட்டார். அப்போது பூஜ்ஜிய நேரத்தில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி வழங்கினார். இதையடுத்து, நேற்று தர்ணாவில் ஈடுபடுவதை திரும்ப பெறுவதாக பா.ஜனதா உறுப்பினர்கள் தெரிவித்தனர். பா.ஜனதாவினர் தர்ணா போராட்டத்தை கைவிட்டதால், கேள்வி நேரம் முடிந்ததும் பூஜ்ஜிய நேரத்தில் 5 இலவச வாக்குறுதி திட்டங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்