மேற்கு வங்காளத்தில் நந்திகிராம் கூட்டுறவு சங்க தேர்தலில் பா.ஜனதா வெற்றி
மேற்கு வங்காளத்தில் நந்திகிராம் கூட்டுறவு சங்க தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்றது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின பர்பா மேதினிபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நந்திகிராமில் உள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றுக்கு தேர்தல் நடந்தது. மாநில எதிர்க்கட்சித்தலைவரும், கடந்த சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை தோற்கடித்தவருமான சுவேந்து அதிகாரியின் தொகுதியில் உள்ள இந்த கூட்டுறவு சங்கம் ஆளும் திரிணாமுல் காங்கிரசிடம் இருந்தது.
ஆனால் தற்போது நடந்த தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்று, கூட்டுறவு சங்கத்தை கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 12 இடங்களில் 11-ல் பா.ஜனதா வெற்றி பெற்று ஆளுங்கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. திரிணாமுல் காங்கிரசால் ஓரிடத்தை மட்டுமே பெற முடிந்தது.
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினருக்கு இடையே பயங்கர மோதலும், வன்முறையும் நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வெற்றியால் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளது. எனினும் இது குறித்து கட்சி சார்பில் எந்த கருத்தும் வெளியாகவில்லை