பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்ஜே.பி.நட்டா பேட்டி

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என ஜே.பி.நட்டா கூறினார்.;

Update: 2023-04-29 18:45 GMT

சிக்கமகளூரு-

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என ஜே.பி.நட்டா கூறினார்.

தீவிர பிரசாரம்

கர்நாடகாவில் சட்டசபை தேர்லுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் கர்நாடகவே நாளுக்கு நாள் பரபரப்பாக காண்கிறது. இந்்தநிலையில் சிக்கமகளுரு மாவட்டம் கலசாவிற்கு பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனி ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அங்கிருந்து கலஷேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு ஜே.பி.நட்டாவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் மூடிகெரே தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தீபக் தொட்டய்யாவை ஆதரித்து ஜே.பி.நட்டா பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியின் போது கூறியதாவது:-

வருகிற சட்டசபை தேர்தல் கர்நாடகத்தில் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் தேர்தல் ஆகும். மக்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும் காலம் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்-மந்திரிகள் நிஜலிங்கப்பா வீரேந்திர பட்டீல் மற்றும் லிங்காயத்தை சேர்ந்தவர்களுக்கு என்ன செய்தது. சித்தராமையா ஆட்சியின் போது மாநிலத்தில் கலவரங்கள் நடந்தது.

இடஒதுக்கீடு

ஆனால் எடியூரப்பா ஆட்சியின் போது பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள் மீது 175 வழக்குகள் தொடர்ந்தார். சிவமொக்காவில் பிரதமர் மோடி விமான நிலையத்தை கட்டி கொடுத்தார். மாநிலத்தில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு மற்றும் லிங்காயத், ஒக்கலிகர்களுக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து கொடுத்தது பா.ஜனதா கட்சி தான். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டை டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் நடக்கும் அனைத்து வளர்ச்சி பணிகள் முடங்கி போகும். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்