கர்நாடகத்தில் அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்கும் பா.ஜனதா; சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் அரசுக்கு எதிரான குரல்களை பா.ஜனதா ஒடுக்குகிறது என்று சித்தராமையா குற்றச்சாட்டி உள்ளார்.

Update: 2022-10-11 21:26 GMT

பல்லாரி:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பல்லாரியில் வருகிற 15-ந் தேதி நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசுகிறார். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிட பல்லாரிக்கு வந்தேன். இந்த பா.ஜனதா அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினால் வழக்கு போடுகிறார்கள். அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்கும் வேலையை பா.ஜனதாவினர் செய்கிறார்கள். அரசு தவறு செய்யும்போது அதுபற்றி கேள்வி எழுப்ப அனைவருக்கும் உரிமை உள்ளது. பா.ஜனதா ஆட்சியில் நமது வரிப்பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இது 40 சதவீத கமிஷன் அரசு. சாதிகள் இடையே மோதலை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. சமுதாயத்தை பிரித்து ஆட்சி செய்ய பார்க்கிறார்கள். விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நல்ல நாட்கள் வரும் என்று பிரதமர் மோடி கூறினார். அந்த நல்ல நாட்கள் இதுவரை வரவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக கூறினர். மாறாக விவசாயிகள் தற்கொலை தான் அதிகரித்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்