மத்திய பிரதேச சட்டசபைத் தேர்தல்: வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை வெளியிட்ட பா.ஜனதா

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், 39 தொகுதிகளில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆளும் பா.ஜனதா வெளியிட்டுள்ளது.

Update: 2023-09-25 17:59 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடந்து வருகிறது. 230 சட்டசபை தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்திற்கு, இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்க, ஆளும் பா.ஜனதா தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில், எதிர்க்கட்சியான காங்கிரசும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், 39 தொகுதிகளில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர்களின் பட்டியலை ஆளும் பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் சிங் படேல் ஆகியோர் திமானி மற்றும் நரசிங்பூர் தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மத்திய மந்திரி பக்கன் சிங் குலாஸ்தே நிவாஸ் தொகுதியில் போட்டியிடுகிறார். தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் பா.ஜனதா எம்பி ராகேஷ் சிங் ஆகியோர் இந்தூர்-1 மற்றும் ஜபல்பூர் பாஸ்சிம் தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் கணேஷ் மந்திரி, ராகேஷ் சிங் மற்றும் ரீத்தி பதக் ஆகியோர் பட்டியலில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவர்.

Tags:    

மேலும் செய்திகள்