மேற்கு வங்காளத்துக்கு மத்திய படையை அனுப்புங்கள் - அமித்ஷாவுக்கு பா.ஜனதா கோரிக்கை

மேற்கு வங்காளத்துக்கு மத்திய படையை அனுப்புங்கள் என்று அமித்ஷாவுக்கு பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2022-06-11 22:35 GMT

கோப்புப்படம்

கொல்கத்தா,

நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் இருவர் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.

அப்போது வன்முறை வெடித்தது. இந்நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மாநில அரசு தவறிவிட்டதாகவும், தனிப்பட்ட அரசியல் காரணத்துக்காக வன்முறை பரவ அனுமதித்துவிட்டதாகவும் மேற்கு வங்காள பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா கான் குற்றம்சாட்டியுள்ளார். வன்முறை பாதித்த ஹவுரா மாவட்டத்துக்கு மத்திய படையினரை உடனே அனுப்பும்படி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் நேற்று தெரிவித்தார்.

மேற்கு வங்காள பா.ஜ.க. இணை பொறுப்பாளரான அமித் மாளவியா, முதல்-மந்திரி மம்தாவால் செயல்பட முடியவில்லை என்றால், ராணுவத்தை களமிறக்கும்படி அவர் கவர்னரை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், சூழ்நிலையை மாநில அரசு திறம்படவே கையாண்டதாக திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்