உத்தர பிரதேசத்தில் பெண் எம்.எல்.ஏ.விடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பா.ஜ.க. எம்.பி. - வீடியோ வைரல்
உத்தர பிரதேசத்தில் பெண் எம்.எல்.ஏ.விடம் பா.ஜ.க. எம்.பி. அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. எம்.பி. சதீஷ் கவுதம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது மேடையில் தனது அருகில் அமர்ந்திருந்த பெண் எம்.எல்.ஏ.விடம் பேசிக் கொண்டிருந்த சதீஷ் கவுதம், திடீரென அவரது தோள்களில் கை வைத்தார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் எம்.எல்.ஏ. தர்மசங்கடத்திற்கு ஆளானார். பின்னர் அவர் வேறு இருக்கையில் மாறி அமர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. சதீஷ் கவுதம் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி அவரை சமூக வலைதளங்களில் பலர் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.