'பா.ஜ.க.வுக்கு வகுப்புவாதம், மதமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது' - சத்தீஷ்கார் முதல்-மந்திரி விமர்சனம்

பா.ஜ.க.வினரின் சிந்தனையில் வன்முறையும், வெறுப்பும் மட்டுமே உள்ளன என்று சத்தீஷ்கார் முதல்-மந்திரி விமர்சித்துள்ளார்.;

Update:2023-11-01 14:15 IST

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநில சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பஸ்டார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பா.ஜ.க.வுக்கு வகுப்புவாதம் மற்றும் மதமாற்றம் ஆகிய இரண்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாது. வாக்குகளைப் பெறுவதற்காக இரண்டு சமூகத்தினரிடையே சண்டையை தூண்டிவிடுவதைத் தவிர அவர்கள் வேறு எந்த வேலையும் செய்வதில்லை.

அவர்களது சிந்தனையில் வன்முறையும், வெறுப்பும் மட்டுமே உள்ளன. பசுமையாக காட்சியளித்த சத்தீஷ்கார் மாநிலம் முன்னாள் முதல்-மந்திரி ரமன்சிங் ஆட்சியில் சிவப்பாக மாறியது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்