பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் பசவராஜ் பொம்மை பேட்டி

வருகிற நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சேர்ந்து சந்திக்கும் என முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2023-09-11 18:45 GMT

உப்பள்ளி-

வருகிற நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சேர்ந்து சந்திக்கும் என முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல்

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜனதா தொடர்ந்து போராட்டம் நடத்தும். கர்நாடகாவில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனை தடு்க்கவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்து சந்திக்க உள்ளோம்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. காங்கிரஸ் அரசு முடங்கி கிடக்கிறது. இதுவரை மாநிலத்தில் ஒரு சாலை கூட காங்கிரஸ் அரசு அமைக்கவில்லை. கிராமம் முதல் நகரம் வரை சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனை கண்டித்து நாங்கள் (பா.ஜனதா) போராட்டம் நடத்தி வருகிறோம்.

கருத்து வேறுபாடுகள்

காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் போராட வேண்டும். 2 விதமான கருத்து வேறுபாடுகள் உள்ள கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க போகிறீர்கள் என பா.ஜனதாவை, ஜெகதீஷ் ஷெட்டர் கேட்டுள்ளார். இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சி, ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டது எப்படி?.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜனதா தொடர்ந்து போராட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்