'பா.ஜ.க. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான கட்சி' - ஜே.பி.நட்டா
பா.ஜ.க. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான கட்சி என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க. என்பது நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான கட்சியாகும். 2024 மக்களவை தேர்தல் முடிவுகளின் மூலம் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவை 2047-ல் வல்லரசு நாடாக நாம் மாற்றிக்காட்ட வேண்டும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
எனவே, பா.ஜ.க. என்பது எதிர்காலத்திற்கான கட்சியாக இருக்கிறது. நமது கடமைகளை நாம் முழுமையாக உணர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டும். இந்தியாவின் அனைத்து திசைகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. நாம் 140 கோடி மக்களின் பிரதிநிதிகளாவோம்."
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.