மெயின்புரி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் அறிவிப்பு

மெயின்புரி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் அறிவித்துள்ளது.

Update: 2022-11-15 22:47 GMT

புதுடெல்லி,

சமாஜ்வாடி கட்சி தலைவர் மறைந்த முலாயம் சிங் யாதவின் மெயின்புரி எம்.பி. தொகுதியில் டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் (வயது 44), சமாஜ்வாடி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டார்.

இந்த நிலையில் அந்த தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. ரகுராஜ் சிங் ஷாக்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிவபால் யாதவுடன் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறியவர். அவர் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியை தொடங்கியபோது அதில் சேர்ந்தார். பின்னர் சிவபால் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வுக்கு இந்த ஆண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்