பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் தோல்வியை தழுவும் அச்சத்தில் பா.ஜ.க. உள்ளது: கெஜ்ரிவால் பேச்சு

பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் தோல்வியை தழுவும் அச்சத்தில் பா.ஜ.க. உள்ளது என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2022-09-03 15:00 GMT



ஆமதாபாத்,



குஜராத்தின் ராஜ்கோட் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரான மனோஜ் சோரத்தியா மீது நடந்த சமீபத்திய தாக்குதல், குஜராத்தின் 6 கோடி மக்களை கோபமடைய செய்துள்ளது.

கடவுளின் முன்பே, மனோஜின் மண்டையை உடைத்து உள்ளனர். இது நமது நாட்டின் கலாசாரம் இல்லை. இந்து கலாசாரமும் இல்லை. இது குஜராத்தின் கலாசாரமும் இல்லை. இந்த சம்பவம் பற்றி அறிந்த பின்பு மக்கள் அதிக கோபத்தில் உள்ளனர் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, சூரத்தில் நாங்கள் மேற்கொண்ட சர்வேயில், 12 இடங்களில் 7 இடங்களை எங்கள் கட்சி கைப்பற்றும் என தெரிந்தது. தோல்வியடையும்போது, இதுபோன்ற தாக்குதலில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள்.

நடப்பு ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்திலும், கவலையிலும் பா.ஜ.க. உள்ளது. இன்று வரை காங்கிரசுடன் நீங்கள் தொடர்பு வைத்துள்ளீர்கள். ஆனால், நாங்கள் காங்கிரசாருடன் தொடர்பில் இல்லை.

சர்தார் பட்டேல் மற்றும் பகத் சிங் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள். நாங்கள் பயப்படுவதில்லை. தொடர்ந்து போராடுவோம் என கூறியுள்ளார்.

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியினருடன் பேச வேண்டாம் என பா.ஜ.க.வினர் ஊடகக்காரர்களிடம் கூறியுள்ளனர். விவாதங்களுக்கு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளனர் என்றும் கெஜ்ரிவால் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

குஜராத்தில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கவனத்தில் கொண்டு கடந்த சில மாதங்களாக பல முறை கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதில், பல வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்