பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக தேர்தல் குழு கூட்டம்..!
பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில், நடைபெறுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள், பாஜக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.