2020 பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக பாஜக சதி செய்தது - நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக சதி செய்தது என முதல்-மந்திரி நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2022-12-11 09:58 GMT

பாட்னா,

பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக சதி செய்தது என முதல்-மந்திரி நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

பீகாரில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் முதல்-மந்திரியும், அக்கட்சி தலைவருமான நிதிஷ்குமார் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், பீகாரில் கடந்த 2005, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் எங்கள் கட்சி (ஐக்கிய ஜனதா தளம்) குறைவான இடங்களைப் பெற்றதில்லை என்பதை அவர்கள் (பாஜக) நினைவில் கொள்ள வேண்டும்.

2020-ல் நடைபெற்ற தேர்தலில் எங்கள் வேட்பாளர்களின் தோல்வி அடைய செய்ய அவர்கள் (பாஜக) முயற்சி செய்ததால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். என பாஜக வின் பெயரை குறிப்பிடாமல் அவர் தெரிவித்தார்.

பீகார் அவர்களிடம் (மத்திய பாஜக அரசிடமிருந்து) எதுவும் பெறவில்லை. மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. அவர் (பிரதமர் மோடி) பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இருந்து வளமாக உள்ள மாநிலத்தை சேர்ந்தவர். ஏழைகளை முன்னேற்றாமல் நாடு முன்னேற முடியாது.

அவர்களை (பாஜக) எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், 2024 பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும். ஆனால் ஒருங்கிணைவது அனைத்து கட்சிகளின் கையில் உள்ளது. அதை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்