மேகாலயா கூட்டணி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு பா.ஜனதா அறிவிப்பு

மேகாலயாவில் தேசிய மக்களின் கட்சி மற்றும் பா.ஜனதா இணைந்த கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

Update: 2022-10-06 19:48 GMT

ஷில்லாங், 

மேகாலயாவில் தேசிய மக்களின் கட்சி மற்றும் பா.ஜனதா இணைந்த கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில முதல்-மந்திரி கன்ராட் சங்மா அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் தேசிய மக்களின் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல்களும் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த நிலையில் மாநில அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மாநில பா.ஜனதா பொறுப்பாளர் சுபா அவோ சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். இதனால் மாநில அரசில் குழப்பம் நீடித்து வந்தது.

ஆனால் இந்த குழப்பத்துக்கு மாநில மந்திரியும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான சன்பார் சுல்லாய் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.

அதாவது தேசிய மக்களின் கட்சி தலைமையிலான மேகாலயா அரசுக்கு பா.ஜனதாவின் ஆதரவு தொடரும் என அவர் அறிவித்தார். அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப்பெறமாட்டோம் எனவும், மாநில அரசு தனது பதவிக்காலம் முழுவதும் நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்