விபசார விடுதியாக செயல்பட்ட பா.ஜ.க. துணை தலைவரின் பண்ணை இல்லம்; 73 பேர் கைது

அசாமில் பா.ஜ.க. துணை தலைவரின் பண்ணை இல்லத்தில் செயல்பட்ட விபசார விடுதியில் இருந்து 5 குழந்தைகளை மீட்ட போலீசார், 73 பேரை கைது செய்துள்ளனர்.

Update: 2022-07-23 16:06 GMT


கவுகாத்தி,



அசாமில் பா.ஜ.க.வின் மாநில துணை தலைவராக இருப்பவர் பெர்னார்டு என். மராக் ரிம்பு. இவருக்கு மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில், போலீசார் இந்த வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் 4 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என 5 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்கள் சுகாதாரமற்ற அறைகளின் உள்ளே வைத்து, பூட்டி அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் பேரதிர்ச்சியில் இருந்தனர். சரியாக பேச முடியாத நிலையிலும் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை பின்னர் எடுக்கப்படும்.

இந்த சம்பவத்தில் 73 பேர் பிடித்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ரத்தோர் கூறும்போது, ரிம்புவின் இடத்தில் இருந்து (பண்ணை வீடு) மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பு, ஆகியவற்றால், ரிம்பு மற்றும் அவரது கூட்டாளிகளால் விபசாரம் நடத்துவதற்கான நோக்கத்துடன் கூடிய விடுதியாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

விசாரணையில் ரிம்பு ஒத்துழைக்கும்படியும் மற்றும் உடனடியாக சரண் அடையும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரிம்பு, முதல்-மந்திரி தனக்கு எதிராக அரசியல் சதி செய்கிறார் என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இந்த பண்ணை வீட்டில் இருந்து 36 வாகனங்கள், 414 மதுபாட்டில்கள், 49 மொபைல் போன்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்