எருமை மாட்டிற்கு பிறந்தநாள் கொண்டாடிய விவசாயி
எருமை மாட்டிற்கு ஒரு விவசாயி பிறந்தநாள் கொண்டாடினார்.
பெங்களூரு:
பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுரா அருகே ரன்னபெலஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சித்து மகாதேவ தாரி. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சித்து, ஒரு எருமை மாட்டை வாங்கி இருந்தார். அந்த எருமை மாட்டின் பாலை சித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அந்த எருமை மாட்டின் முதலாவது பிறந்தநாளை சித்து தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். அப்போது கேக் வெட்டிய சித்து, எருமை மாட்டிற்கும் கேக் ஊட்டி மகிழ்ச்சி அடைந்தார். மேலும் உறவினர்களுக்கும் சித்து உணவு அளித்தார்.