பறவை மோதல்; லக்னோ-கொல்கத்தா விமானம் அவசர தரையிறக்கம்

லக்னோவில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்ற விமானம் பறவை மோதலால் லக்னோ விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.;

Update: 2023-01-29 09:41 GMT



லக்னோ,


உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இருந்து ஐ5-319 என்ற ஏர் ஆசியா விமானம் இன்று கொல்கத்தா நகரம் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில், விமானம் உயரே எழும்பிய சிறிது நேரத்தில் அதன் மீது பறவை ஒன்று மோதி உள்ளது. இதனால், உடனடியாக மீண்டும் லக்னோ விமான நிலையத்திற்கே விமானம் திரும்பியது. இதில், விமானத்திற்கு மற்றும் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி பரிசோதனை நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளில் விமான நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்