போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

முறைகேடு செய்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.;

Update: 2024-02-09 15:58 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில், மாநிலங்களவையில் இன்று பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது. சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

முன்னதாக மக்களவையில் இந்த மசோதா கடந்த 6-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. முறைகேடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், "நமது நாட்டிற்கு இளைஞர் சக்தி இன்றியமையாதது. அவர்களது எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை இந்த மசோதா தடுக்கும். தகுதியை இல்லாதவர்கள், பிறரின் தகுதியை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்