பில்கிஸ் பானு வழக்கு : சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது.
கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.