"பலத்த இசையால் பறிபோன உயிர்" மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் மரணம்

இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று மணமகன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அவர் சொல்வதை கேட்கவில்லை.

Update: 2023-03-03 10:34 GMT

சீதாமர்ஹி

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சோன்பர்சா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தர்வா கிராமத்தில் திருமண விழா நடந்து கொண்டிருந்தது.

மணமகன் சுரேந்திர குமார் இவர் ரெயில்வேயின் குரூப் டி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமடையில் மணமகளுடன் அமர்ந்து இருந்தார்.

அங்கு கொண்டாட்டமான சூழல் நிலவி வந்த இளைஞர்கள் சத்தத்தைக அதிகமாக வைத்து இசையில் நடனமாடிக்கொண்டிருந்தனர்

இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று மணமகன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அவர் சொல்வதை கேட்கவில்லை.

இந்த நிலையில் மணமகள் மணமகன் மாலை மாற்றிக்கொண்டனர். மணமகள் கழுத்தில் சுரேந்திரகுமார் மாலை அணிவித்த அடுத்த நொடி மேடையில் மயங்கி சரிந்து விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இசையின் பலத்த சத்தத்தால் சுரேந்திரன் இறந்ததாக ஊர்வலத்தில் இருந்தவர் ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்