ஓடும் பஸ்சில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் டிரைவர் -கண்டக்டர் கைது

பீகாரில் பேருந்துக்குள் வைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-08 11:09 GMT

பாட்னா

பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா பஸ் நிலையத்தில் சிறுமி ஒருவர் பாட்னா செல்ல நின்று உள்ளார்.பாட்னாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி கண்டக்டரும், டிரைவர் ஒருவரும் அவரை பஸ்சில் ஏற்றி உள்ளனர்.பின்னர் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளனர். இதில் சிறுமி மயக்கம் அடைந்து உள்ளார். பைபாஸ் சாலையில் பஸ் செல்லும் போது ஓடும் பஸ்சில் வைத்து டிரைவர், நடத்துனர் மேலும் ஒருவர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

சிறுமியை  அரை மயக்கத்தில் மீட்ட போலீசார் பஸ்சையும் பறிமுதல் செய்தனர். சிறுமியின் புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்