சட்டசபை சபாநாயகர் பதவி நீக்கம் - பீகார் அரசியலில் பரபரப்பு

பீகார் சட்டசபை சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிபெற்றது.;

Update: 2024-02-12 10:44 GMT

 

பாட்னா,

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணியுடன் மீண்டும் ஆட்சியமைத்தார்.

இந்நிலையில், பீகார் சட்டசபையில் இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபை சபாநாயகராக ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த அவதா பிகாரி சவுதிரி செயல்பட்டு வந்தார். 

இந்த தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சபாநாயகருக்கு எதிராக 125 உறுப்பினர்களும், ஆதரவாக 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் சபாநாயகரை நீக்க கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றது. தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து அவதா பிகாரி சவுதிரி பீகார் சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்