பிள்ளாரிப்பட்டு உயர்நிலைப்பள்ளியில் ரூ.65 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை மந்திரி ஆர்.கே.ரோஜா பங்கேற்பு

Update: 2022-08-24 19:24 GMT

திருப்பதி,

திருப்பதி மாவட்டம் புத்தூரில் உள்ள காமாட்சிதேவி சமேத சதாசிவேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவராக கொடகண்டி ரமேஷ்பாபு பதவியேற்றார்.

நிகழ்ச்சியில் மந்திரி ஆர்.கே.ரோஜா ேபசுகையில், புத்தூர் சதாசிவேஸ்வரர் கோவில் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளை மேற்கொள்வேன், என்றார்.

நிகழ்ச்சியில் புத்தூர் நகர மன்ற தலைவர், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், புத்தூர் கிராமிய மண்டல பரிஷத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து புத்தூர் மண்டலம் பிள்ளாரிப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் கூடுதலாக வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது. பூமி பூஜையில் மந்திரி ஆர்.கே.ரோஜா பங்கேற்று கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி வைத்து கட்டுமானப் பணிைய ெதாடங்கி ைவத்தார்.

அப்போது மந்திரி ஆர்.ேக.ரோஜா ேபசுகையில், ரூ.65 லட்சம் செலவில் பிள்ளாரிப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் நாடு-நேடு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. அதற்கானக் கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்