கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது; மோடி அரசின் விரக்தியை பிரதிபலிக்கிறது - காங்கிரஸ் விமர்சனம்

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை வரவேற்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-01-24 08:30 GMT

புதுடெல்லி,

பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. மறைவுக்கு பின் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக போராடிய கர்பூரி தாகூர், பீகாரில் இருமுறை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார்.

இந்நிலையில் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதன் மூலம் மோடி அரசின் விரக்தி மற்றும் பாசாங்குத்தனம் வெளிப்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசின் விரக்தியையும், பாசாங்குத்தனத்தையும் பிரதிபலிக்கிறது என்றாலும், சமூக நீதியின் வீரர் கர்பூரி தாக்கூருக்கு அவரது மறைவுக்குப் பின்னர் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது."

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்