கேரளாவில் ராகுல்காந்தி 19 நாள் பாத யாத்திரை பல்வேறு துறை பிரபலங்களை சந்திக்கிறார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை 3 ஆயிரத்து 750 கி.மீ. தூரம் ‘பாரத் பாதயாத்திரை’ மேற்கொள்கிறார்.

Update: 2022-08-25 20:47 GMT

திருவனந்தபுரம், 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை 3 ஆயிரத்து 750 கி.மீ. தூரம் 'பாரத் பாதயாத்திரை' மேற்கொள்கிறார்.

கேரளாவில் அவரது பயண திட்டம் குறித்து அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கொடிக்குன்னில் சுரேஷ் எம்.பி. பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

செப்டம்பர் 11-ந்தேதி, தமிழ்நாட்டில் இருந்து பாறசாலா என்ற இடத்தில் கேரளாவுக்குள் ராகுல்காந்தி நுழைகிறார். அவர் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வரை 450 கி.மீ. தூரம் கேரளாவில் பாதயாத்திரை செல்வார். இதற்கு 19 நாட்கள் ஆகும்.

ராகுல்காந்தியும், அவருடன் செல்லும் 300 தொண்டர்களும் நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. தூரம் நடப்பார்கள். காலை 7 மணி முதல் 10 மணிவரையும், மாலை 4 மணி முதல் 7 மணிவரையும் 2 ஷிப்டுகளாக நடப்பார்கள். இடைப்பட்ட நேரத்தில், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், இளைஞர்கள், மீனவ, விவசாய குழுக்கள், ஏழைகள் ஆகியோரை ராகுல்காந்தி சந்திக்கிறார்.

நாட்டின் பிரச்சினைகள், மோடி அரசின் மக்கள்விரோத கொள்கைகள் ஆகியவற்றை அவர் விளக்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்