ராஜஸ்தானுக்குள் நுழைந்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை
ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நடத்தி வருகிறார்.
ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். 66 நாட்களில் 15 மாநிலங்களை கடந்து மராடியத்தின் மும்பையில் யாத்திரை நிறைவடைய உள்ளது.
மணிப்பூரில் தொடங்கிய யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடத்து உத்தரபிரதேசத்தில் நடந்துகொண்டிருந்தது. உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி நேற்று மேற்கொண்ட யாத்திரையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நிறைவடைந்த பாரத் நியாய யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. நேற்று இரவு ராகுல்காந்தியின் யாத்திரை ராஜஸ்தானுக்குள் நுழைந்துள்ளது. ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகள் வழியாக செல்லும் யாத்திரை அங்கிருந்து குஜராத், மத்தியபிரதேசம் வழியாக இறுதியில் மராட்டிய மாநிலம் சென்றடைய உள்ளது.