கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழி தடுப்பு மருந்து 3-ம் கட்ட சோதனை அனுமதி கேட்டு விண்ணப்பம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மூக்கு வழி தடுப்பு மருந்தை (இன்கோவாக்-பிபிவி154) ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

Update: 2022-09-11 20:42 GMT

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மூக்கு வழி தடுப்பு மருந்தை (இன்கோவாக்-பிபிவி154) ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பு மருந்தினை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்துவதற்கான அவசர கால பயன்பாட்டு அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 6-ந் தேதி வழங்கியது. இந்த நிலையில் அந்த தடுப்பு மருந்தை 5 முதல் 18 வயது வரையிலானோருக்கு மூக்கு வழியாக செலுத்தி, அதன் பாதுகாப்பு, எதிர்வினை, நோய் எதிர்ப்புச்சக்தி ஆகியவற்றை பரிசோதிப்பதற்கான 3-ம் கட்ட ஆய்வு நடத்துவதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தின் முதல் இரு கட்ட சோதனைகள் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்