பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்த 7 பேர் கைது
தட்சிண கன்னடா மாவட்டத்தில் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்த 7 பேரை போலீசார் அதிரடியா கைது செய்தனர்.
மங்களூரு;
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ. அமைப்புக்கு தடைவிதித்தது. இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் நேற்றுமுன்தினம் தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிக்குமார் தலைமையிலான போலீசார் பனம்பூா், சூரத்கல், மங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பி.எப்.ஐ,, எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அந்த அமைப்பை சேர்ந்த முகமது ரபீக், முகமது பிலால், முகமது ரபீக் உல்லாலா, அப்பாஸ், அக்பர் சித்திக், கந்தஹாரா கபீரா, முனீர் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.