பெங்களூருவில் 132 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழை

ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.

Update: 2022-08-31 18:26 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில், கடந்த 132 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சர்ஜாப்பூர், பெல்லந்தூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே அங்கு அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்