பெங்களூருவில் நாளை கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

பெங்களூருவில் நாளை (சனிக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2022-09-09 12:57 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பெங்களூருவில் கடந்த 4-ந் தேதி இரவு வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்ஜாப்புரா, மாரத்தஹள்ளி, காடுகோடி, இந்திராநகர், எச்.ஏ.எல்., ஒயிட்பீல்டு உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கின. அந்த பகுதில் தேங்கிய வெள்ளம் வடிந்துள்ளது. ஆனால் அந்த பகுதியில் கட்டிடங்கள் சேறும்-சகதியுமாக மாறியுள்ளன.

கடந்த 2 நாட்களாக வாகனம் மேகமூட்டமாக காணப்பட்டாலும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அவ்வப்போது சாரல்மழை பெய்தது. இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று காலை முதலே வாகனம் பளிச்சென காணப்பட்டது. மேககூட்டங்கள் சூரியனுக்கு வழிவிட்டதால் லேசான வெயில் அடித்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் நாளை (சனிக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பெங்களூரு, பெலகாவி, பீதர், கலபுரகி, யாதகிரி, சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, கோலார், சிவமொக்கா, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எ்னறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்று 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்