புத்தாண்டு பண்டிகையையொட்டி பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு
புத்தாண்டு பண்டிகையையொட்டி பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு.
பெங்களூரு:
பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புத்தாண்டு பண்டிகையையொட்டி பெங்களூருவில் 1-ந் தேதி அதிகாலை 2 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பையப்பனஹள்ளியில் இருந்து அதிகாலை 1.35 மணிக்கும், கெங்கேரியில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கும், நாகசந்திராவில் இருந்து அதிகாலை 1.30 மணிக்கும் கடைசி ரெயில்கள் புறப்படும்.
எம்.ஜி.ரோடு, டிரினிட்டி, கப்பன் பார்க் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மற்ற ரெயில் நிலையங்களுக்கு பயணிக்க டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இரவு 11.30 மணிக்கு மேல் டோக்கனுக்கு பதிலாக பேப்பர் டிக்கெட் வழங்கப்படும்.
இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியுள்ளது.