சர்வதேச ரோபோடிக் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்பு போட்டி: விருதை வென்ற பெங்களூரு மருத்துவர்..!!

ரோபோடிக் அறுவை சிகிச்சை போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் சந்தீப் நாயக் விருது பெற்றுள்ளார்.

Update: 2022-09-13 13:17 GMT

Image Tweeted By @sandeepnayakp

பெங்களூரு,

அமெரிக்காவின் மிச்சிகனை தளமாகக் கொண்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை அறக்கட்டளையின் 'கேஎஸ் சர்வதேச ரோபோடிக் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்பு போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் சந்தீப் நாயக் விருது வெற்றி பெற்றுள்ளார்.

உலகளாவிய ரோபோடிக் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்பு போட்டிக்கான விருதுகளை 3 பேர் வென்றுள்ளனர். சந்தீப் நாயக் 2-வது பரிசை பெற்றுள்ளார். மருத்துவர் சந்தீப்பை தவிர அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களும் இந்த பரிசை வென்றுள்ளனர்.

உலக அளவில் சிறுநீரகம், மகப்பேறு மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கணைய அறுவை சிகிச்சை, பெருங்குடல், தலை மற்றும் கழுத்து, குழந்தை மருத்துவம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் ஆகிய பிரிவுகளில் இருந்து கலந்து கொண்ட 100 மருத்துவ நிபுணர்களின் மூன்று பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மருத்துவர் சந்தீப் நாயக் குறித்து ரோபோடிக் அறுவை சிகிச்சை அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிக பெரிய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யும் வகையில் கழுத்தில் நிணநீர் கணுக்களை நீக்கி, குறைவான அசௌகரியத்துடன் நோயாளி விரைவாக குணமடையும் வகையில் ரோபோ தொழில்நுட்பத்தை மருத்துவர் சந்தீப் நாயக் கண்டுபிடித்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்